sumathivinayagam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sumathivinayagam |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 28-Sep-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 9 |
தமிழன் என்பதில் பெருமை அடையும் இந்தியக் குடிமகன்
என்னங்க
என்றழைத்து
என்ன வேண்டும்
உங்களுக்கு என்று
கேக்காமலேயே எல்லாமே
எனக்களித்து நான் களிப்புற
எனைக்கண்டு நீ களிப்புறுவாய்
என்னங்க என் எண்ணங்கள் என்னங்க!!!
வட்ட முகம் அதில்
வைடூரியங்களாய் மினனும்
கண்கள்
முழியழகோ மூக்கழகோ
வைக்கவேன்டும் பட்டிமன்றம்
செவ்விதழின் அழகை அப்பா நான்
வர்ணிக்கலாகாது
சில்லென்ற தென்றலாய்
மெத்தென்ற பிஞ்சுக்கரங்ககள்
எங்கள் மேல் பட்டாலே
பாவங்கள் பறந்தோடும்
பிஞ்சுப்பாதங்கள் எம்
முகத்தின் மேல் பட்டாலே
முகம் பொலிவு பெற்றிடுமே
துள்ளி விளையாடும் பூஞ்சிட்டுக்களே சேர்ந்தேதான்
செய்து வைத்தோம்
நடமாடும் ஓவியங்களாய்!
வட்ட முகம் அதில்
வைடூரியங்களாய் மினனும்
கண்கள்
முழியழகோ மூக்கழகோ
வைக்கவேன்டும் பட்டிமன்றம்
செவ்விதழின் அழகை அப்பா நான்
வர்ணிக்கலாகாது
சில்லென்ற தென்றலாய்
மெத்தென்ற பிஞ்சுக்கரங்ககள்
எங்கள் மேல் பட்டாலே
பாவங்கள் பறந்தோடும்
பிஞ்சுப்பாதங்கள் எம்
முகத்தின் மேல் பட்டாலே
முகம் பொலிவு பெற்றிடுமே
துள்ளி விளையாடும் பூஞ்சிட்டுக்களே சேர்ந்தேதான்
செய்து வைத்தோம்
நடமாடும் ஓவியங்களாய்!
அழகிய காலை பொழுது.
பூங்காவில் ஒரு வயதான பெண்மணியும் அவருடைய மகனும் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு ஒரு காகம் அவர்கள் அமர்திருந்த இருக்கையின் முன்னுள்ள மரத்தின் மேல் அமர்ந்திருந்தது.
அதை பார்த்த அந்த தாய் தன் மகனை அழைத்து, "அந்த மரத்தின் மேல் அமர்ந்துள்ள பறவையின் பெயர் என்ன?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த மகன், "அந்த பறவையின் பெயர் காகம் அம்மா.." என்று பதிலளித்தான்.
சற்று நேரம் களித்து மீண்டும் சற்று ஆச்சரியத்தோடு தன் மகனை அழைத்து அந்த மரத்தில் அமர்ந்துள்ள பறவையின் பெயர் என்ன என்று கேட்டாள்.
இம்முறை அந்த மகன் சற்று கடுப்பாகி, "காகம் தாயே..." என்றான்.
"சரி.. சரி.." என்று அமைதியானா