கவி இளவல் தமிழ்- கருத்துகள்

என்னை 'நீ யார்?' என்று கேட்காதீர்கள்
எத்துனை சொன்னாலும் அந்த பதில் முடியாது
என்னை 'ஏன்?' என்று கேட்காதீர்கள்
என்னதான் சொன்னாலும் அது புரியாது ,..
விதிகளுக்குள்ளே அடங்காதவன்
சாமானியனாய் ஒடுங்காதவன்
சதிகளுக்குள்ளே மடங்காதவன்
சுயநலப் பேயாய் சுருங்காதவன்
பொது நலம் பேணியே தினம் வாழ்பவன்
ஊருடன் சேரவும் முடியாதவன்
இருந்தும் ,
தனியாய் ஓரிடம் தேடி ஒதுங்காதவன்
கற்பனை உலகின் பிரஜையானவன்
கற்றதை பரப்பும் சிறு நாவலன் ,
உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால் ,
உலக நசுங்களில்வாழ முடியாததால்
நான் வாழத் தெரியாதவன்
நரனின் வாழ்க்கை புரியாதவன்
ஆம் நான் மண்ணில் வாழும் மனிதன் அல்லன்
விண்ணில் வாழ இறைவனும் அல்லன்
மண்ணுக்கும் விண்ணுக்கும் மத்தியிலே
யார் கண்ணுக்கும் தெரியாமல் நீல்கின்ற காற்றினிலே
நிழலாய் நிஜமாய் நிற்கின்ற ஓர் வேதியிலே
சொல்லும் பொருளும் ஆழும் தேசத்தில்,
அல்லும் பகலும் அறிவைத் தேடித்திரியும்
அற்ப ஜீவன் நான்
அதனால் என் பெயர் "கவிஞன்" ,...!


கவி இளவல் தமிழ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே