Mohan Sabapathy- கருத்துகள்
Mohan Sabapathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [11]
தமிழ்ப் புத்தாண்டு - 2051
---------------------------------------------
தை திங்கள் முதலாம் நாள்
தமிழ்ப் புத்தாண்டு இன்று
திருவள்ளுவர் ஆண்டு
இரண்டாயிரத்து ஐம்பத்தொன்று
திருவுடன் பொலிவுடன்
இன்று பிறந்தது
மலரும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்...
வாசலிலே வாழை கட்டி
வண்ணங்களால் கோலமிட்டு
கும்பம் வைத்து
குத்துவிளக்கேற்றி
சக்கரைப் பொங்கலிட்டு
காத்திருப்போம் அதிகாலை
தமிழ்ப் புத்தாண்டை
தலைவணங்கி வரவேற்க...
புத்தாடை அணிந்து புதிதாய் பிறப்போம்
பெரியோரை வணங்கி பேறுகள் பெறுவோம்
தெய்வம் தொழுதுள்ளம் தூய்மை செய்வோம்
சுற்றம் சூழ்ந்து வாழ்த்துக்கள் பகிர்வோம்...
இன்று எமது தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துவோம் வாழுவோம்...
இன்றைய நாளை
தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட
உறுதி எடுப்போம்
மிகச்சிறப்பாகவுள்ளது. பாராட்டுக்கள்
மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி
மிக்க நன்றி