ப்ரீத்ய்ப்ரிய- கருத்துகள்
ப்ரீத்ய்ப்ரிய கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [29]
- hanisfathima [20]
துயிலெழுப்ப
குடத்துக்குள்ளிருந்து
கூடம் வந்திருக்கின்றது
இந்த அகல்,
கூரை ஏறத்துடிக்கிறது ,
கோழி பிடிக்க அல்ல,
கூவும் சேவலாய்
குவலயத்தின் துயிலெழுப்ப .
புதிர்
தீபம் என்பதும்
தணல் என்பதும்
நெருப்பின்
இரு வேறு வடிவங்கள்.
காற்றைக் குவித்தால்
அணைகிறது தீபம்,
உயிர்க்கிறது தணல்.
காற்று நெருப்பை
அணைக்கிறதா,உயிர்க்கிறதா?
யானை கட்டி தீனி போட்டு
அங்குசத்திற்கு
அடங்க மறுக்கிறது இந்த
யானை.
'மவுஸ் 'என்னும் அங்குசத்தால் குத்தி,
'கீ போர்டால் '
உத்திரவு கொடுக்கிறேன் .
ஆனாலும் அடங்க மறுக்கிறது
இந்த கம்ப்பியூட்டர் யானை.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
வேண்டும் என்பதால்
அந்த
யானையைக் கட்டி
தீனி போடுகின்றேன்,
வேறு என்ன செய்ய?
கையில் கிடைத்தது
எழுத்துப் பறவைகளின்
சரணாலயம் என்கிறார்கள்
நூலகங்களை .
எங்கள் ஊர் சரணாலயத்தில்
நெஞ்சுக்கு நெருக்கமான
கவிஞர்களைத் தேடினேன் ,
கை நிறைய கிடைத்தது தூசி.
பைத்திய மருந்து
சட்டை கிழிக்காமல்,
எவர் மீதும்
கல் எடுத்து அடிக்காமல்
நாகரீக உலகத்தின்
பைத்தியம், அவனும் அவளும்..
அவனுக்கு, அவள் மீது
அவளுக்கு, அவன் மீது.
கலாட்டா , கை கலப்பு நடுவே
கல்யாணம் செய்து கொண்டார்கள் .
தெளிந்தத்து
இருவரின் பைத்தியமும்.
கடிதம் ஒன்று எழுத வேண்டும்.
"கடிதம் ஒன்று எழுத வேண்டும்"
கண்கள் விரித்த வலைக்குள்
காகிதம் எதுவும் சிக்காத போது
நினைவு வலைக்குள் சிக்கியது ,
நேற்று
சுக்கு நூராய் கிழித்து
கூடைக்குள் போட்ட அந்த காகிதம்.
நல்ல வேளை ,
நகராட்சி வண்டி இன்னும் வரவில்லை.
கூடையைத் தட்டி ,அள்ளியதை
பசை நூல் கொண்டு
தைக்கிறேன் ,தைக்கிறேன் ;
தைத்துக் கொண்டே இருக்கிறேன் .
புரிதல்
என் மனைவியின்
நெஞ்சுக்கு நெருக்கமான
"அது" கண்டால்
மூக்கு வாடை பிடிக்க,
மூளை பிடிவாதம் பிடிக்கும்.
வாங்கிவிட்டுத்தான் மறுவேலை..
பிறந்த வீட்டில்
வாரம் ஒருமுறை நிச்சயம்.
புகுந்த வீட்டில் புகுந்த போது
அப்போது இப்போது என
எப்போதாவது -
கிடைத்தபோது.
கேட்டுக் கேட்டு
ஏமாற்றத்தால் முகம் வீங்கிப்போன
ஒரு நாளில்
வாங்கிவந்தேன் ,
அலைந்து திரிந்து.
"வா.......வ் -" சூரியன் கண்ட தாமரையாய்
முகம் மலர,
இரண்டாம் முறை, மூன்றாம் முறையென
"வா.....வ்" ,"வா.....வ்".
ஒவ்வொரு முறையும்
கவனித்துக்கொண்டிருந்தது
என் வாரீசு.
ஒரு சுமாரான
இடைவெளிக்குப் பிறகு
மீண்டும்
வாங்கிவந்தேன் அதை.
"அம்மா,அம்மா ;
"வா.....வ்" வாங்கி வந்திக்கிறார் அப்பா "
கத்தல்
கட்டி இழுத்து வந்தது அவளை.
"வாவ்வா";
என்னடா ஒளர்ர "
"ஒளரல மம்மி,
அப்பா "வாவ்"தான் வாங்கி வந்திருக்கிறார்."
தலை சொரிந்து, பிரித்துப்பார்த்து,
"வா.....வ்".
"நான் சொன்னேனில்ல?"- என் மகன் .
ஆம்,
எங்கள் வீட்டில் "வா.....வ்"
ஏறாவுக்கான (இறால் )குறியீடு.
வீடு தோறும் விஞ்ஞான கூடம்.
"பூஜை அறை
ஒன்றிருந்தால் போதாது ;
விஞ்ஞான வேள்வி நடக்க
வீடு தோறும்-
ஒரு அறை வேண்டும்"
ஈரோட்டுக் கவிதை
எர் நடத்த,
ஆழமாக இறங்கியிருக்கிறது
எங்கள் வீட்டு பெண்களின்
இதய வயல்களில்.
என்ன செய்வது?
இடப்பற்றாக்குறை .
சமையல் அறைகளிலேயே
தொடங்கிவிட்டார்கள் ,தங்களது
விஞ்ஞான வேள்விகளை.
"டீ.வி "சேனல்கள்
பேராசிரியர்களாய் பாடம் நடத்த.
புதுப் புதிதாய் "ரெசிப்பிக்கள்".
பாவம் கணவர்கள் --
பரிசோதனை எலிகளாய் ,முயல்களாய் ..
நன்றி மிஸ்டர் julius