பாரதிசந்திரன்- கருத்துகள்
பாரதிசந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- தருமராசு த பெ முனுசாமி [19]
- ஜீவன் [18]
கவிஞர் வீரமணி அவர்களின் விமர்சனம்
மனித குலத்தை ஏற்படுத்திய சக்தியைப் படைத்தவன் என்று நாம் கும்பிடுகிறோம் கொண்டாடுகிறோம் அதுபோல எழுத்தாளனையும் படைப்பாளி என்று தெய்வத்தின் நிகர் கொண்டு நாம் பார்க்கிறோம். இந்தப் பூவும் தூரமும் எனக்கு ஒரு கடவுளின் சீற்றமாகத் தோன்றுகிறது பலமுறை இதைப் படித்து விட்டேன்.. இது ஒரு அறச்சிற்றம்... ஒரு கூர் வாளை நன்றாகத் தீட்டி நடுநெஞ்சில் சொருகி விட்டது போல் இருக்கிறது.. எந்த வலியும்ய தெரியாத ஒரு குண்டு பாய்ந்து இருக்கிறது.. எழுத்தாளனின் சொந்த வாழ்க்கை அப்படியே நான்கு சுவற்றுக்குள் முடங்கிவிடாமல் அவன் சிந்தனையில் புகுந்து புறப்பட்டு வெளியே வந்து தேன் வடிக்கிறது... இந்தப் பூவும் தூரமும் காலகாலமாய் புரையோடி கிடக்கிற புராதான வலி மிகுந்த வெளியில் சொல்ல முடியாத ஒரு நியதி.. நவீன உலகத்தின் எல்லா கண்டுபிடிப்புகளும் இந்த எழுதப்படாத விதிக்கு முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன.. யார் வந்து காப்பாற்றுவது எங்கே நின்று இதை சரி செய்வது எப்பொழுது தான் இது சரியாகும் என்று ஓராயிரம் கேள்விகள் . எல்லாவற்றிற்கும் பதிலாய் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமாய் இந்தப் பூவும் தூரமும் வந்து நிற்கிறது.. சொல்லத் துணியாததை எழுதத் துணியாததை எழுதிய இந்த எழுத்தாளருக்கு என் அன்பின் பெரு முத்தங்கள்.. என்னதான் உலகம் விண்ணை எட்டிப் பிடித்தாலும் இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலக்கியத்தை விட்டால் வேறு எந்தக் கருவிகளும் இல்லை என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக இங்குக் குறிப்பிடுகிறேன்.. இந்த இலக்கிய விஞ்ஞானிகள்.. பாரதி சந்திரன் போன்ற துணிச்சல் மிகு படைப்பாளிகள் இந்த வியாதிகளுக்கு எல்லாம் மாமருந்தாக இருப்பார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.. இதைப் பிரசுரத்துக்கு ஏற்று பிரசவித்த எழுத்து உலகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்.. பூப்பூக்கட்டும் மற்றவர்களெல்லாம் வெகுதூரம் செல்லட்டும்..
நன்றி சகோ. தங்களின் விம்ரசனம் மகிழ்ச்சியைத் தருகிறது.
nanri nanri
nanri nanri
கவிதை ஆழமானதாக உள்ளது .வாழ்க பணி .
கவிதை அருமை வாழ்த்துகள்.