பூவும் தூரமும்”

பூவும் தூரமும்”



”சாமந்தி… ரோஸு… மல்லிப்பூவு

ஒரு கவர் பத்து ரூவா….”

பெருங்குரலெடுத்துத் தெருவில் கத்திச்செல்கிறாள்

பூக்காரம்மா.


“ஏங்க… எப்பப் பாத்தாலும் பேப்பரும் கையுமா

எழுதிக்கிட்டேவா இருப்பாங்க.

போங்க… ஒரு கவரு சாமந்தி வாங்கி வாங்க..

பூக்காரம்மா தெருவுல வேகமா போயிடும்.”


“ இப்பத்தான் குப்பையைக் கொண்டு போய்

குப்பைக்காரம்மா வண்டியில் கொட்டிட்டு வாங்கண்ணு சொன்ன…

கொட்டிட்டு வந்தேன்.

வீதியில நிக்கற வண்டியில

கண்ட நாய்ங்க மூத்திரம் அடிக்குது

காம்பவுண்டுக்குள்ள வையுங்கண்ண

வைச்சேன்.

இப்ப பூ வாங்குகிற…

எதுக்குத்தாண்டி லீவு விடுறானுக

எங்களுக்கு”



”நானு ஒன்னும் சும்மா இல்ல… என்ன…

தலைக்குத் தண்ணி ஊத்திக்கிட்டேன்.

சாமிக்கு வைக்கிற பூவு.

நான், வாங்கக் கூடாதுன்னு வாங்கச்சொன்னா…

ரொம்பத் தான் மாரடிக்கிறீங்க…

நல்ல நாளும் அதுவுமா

எனக்கு ஏன் தான் இப்படி ஆகுதோ ஆண்டவா”


தெருவின் மூலைக்கே சென்று விட்டாள் பூக்காரி

கூப்பிட்டாலும் கேட்காது.

எங்கேவாது போய் தான் பூ வாங்கி வரவேண்டும்.

இல்லையென்றால்

இன்று பத்தரகாளி வேஷம் தான்.

”கஷ்டகாலம்டா சாமி.

ஆமாம்.எனக்கு ரொம்ப நாள் சந்தேகம்.

மாதம்தோறும் பூ விற்கும்

பூக்காரிகளெல்லாம்

தலைக்குத் தண்ணியே ஊத்திக்க மாட்டாங்களா என்ன?

இவளுக்கு மட்டும் தான்

தீட்டாம்”


என்று மனதில் வந்த வார்த்தைகளைக் கொண்டு

கவிதை எழுதி முடித்தான் அந்தக் கவிஞன்

இப்படியாக,

”பூவும்- தூரமும்

இரண்டும்

கடவுளின் படைப்பு தானே?




பாரதிசந்திரன்

திருநின்றவூர்

9283275782

எழுதியவர் : பாரதிசந்திரன் (16-Feb-23, 10:50 pm)
சேர்த்தது : பாரதிசந்திரன்
பார்வை : 174

மேலே