thamizhchelvan- கருத்துகள்
thamizhchelvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
விளம்பரம் சேனல்களுக்கு உயிர்மூச்சு போன்றது. பார்க்கின்ற மக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும். புதிய ஆடையைக் காட்டி இது இந்த சோப்பால் சலவை செய்யப்பட்டது என்கிறார்கள். திரைப்படத்திற்கு சென்ஸார் இருப்பது போல், விளம்பரத்தில் சொல்லப்படுவதுபோல் அந்தப் பொருள் செயல்படுமா என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் நிரூபிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். எவ்வாறாயினும் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்றால் ஒழிய இதுபோன்றவகை ஒழிக்க முடியாது என்பது நமது கருத்தாகும்.
நகைச்சுவை புதியது இல்லை எனினும் காரைக்குடியாரின் முடிக்கும் திறன் அருமை. சரவணவன் அவர்களுக்கு இருமுகங்கள். ஒன்று நகை இன்னொன்று டிஜிட்டல். வாழ்க.
"எழுத்தடங்கு" என்னுமொரு புதிய சொல்லை கையாண்டு ஓர் அருமையான கவிதையை படைத்துள்ளீர்கள். கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக மிக சிறப்பாக இருக்கிறது. நடைமுறை அரசியலை காக்கையை விரட்டுவதின் மூலம் வெகு சிறப்பாக படைத்திருக்கிறீர்கள்,
தங்கள் கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். ஆனால் கடைசி வரியை சற்று சிந்திப்போம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றால், நம் தமிழ்நாடெங்குமா? உலகமெங்குமா? உலகமெங்கும் எனில் நமது பங்களிப்பு என்ன? வியப்பூட்டும் அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி "உலக கிராமம்" என்றும் ஆங்கிலத்தில் "குளோபல் வில்லேஜ்" என்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கும் ஒரே மொழிதான் ஆட்சி புரியும் என்கிறார்கள். அது எந்த மொழியாக இருக்கப்போகிறது? சிந்திப்போம்.
செயல்பாடு என்பது வழக்குச் சொல்லாகும். செயல்படு என்பதே பேச்சு வழக்கில் மருவி செயல்பாடு ஆனது. வழிபடு என்பது எப்படி வழிபாடு ஆனதோ அதைப் போலதாகும். நான் உங்கள் வழியில் வருவது உங்களை வழிபடுதல் ஆகும். கடவுள் வழி என்பது அன்பும் கருணையுமாக இருத்தல். எவ்வுயிர்களிடமும் இவ்வாறு இருத்தல் கடவுள் வழிபடுதல் ஆகும். இதுவே வழிபாடு என்று மருவிற்று. செயற்படு என்பதே செயல்படு என்ற கூட்டுச் சொல்லுக்கு சரியான ஒற்றைச்சசொல்லாகும்.
மரபுக் கவிதை என்பது அரிசிச் சோறு, புதுக் கவிதை என்பது பாஃஸ்ட் புட்.
கவியாழினி சரண்யா, தங்கள் படைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பரிசு பெற்றமைக்கு மகிழ்ச்சி.
காதலிப்பதற்கு வயது எதற்கு?