சேர்த்தவர் : Rosichandra5f2e81d21fa4f, 20-Nov-20, 9:52 am

கவிதைகளில் கலைச்சொற்கள்

போட்டி விவரங்கள்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *29.11.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12-இலக்கியக்
கலைச்சொற்களை
24 - வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.

*விரும்பிய தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.*

நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*

https://forms.gle/iqZfPfbqCpCunPPR8

அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. *தபுதல்*- விழுதல்
2. *நோனார்* - பகைவர்
3. *முடுகு* - வேகம்
4. *மனாலம்* - குங்குமம்
5. *போழ்வு* - பிளவு
6. *பொசிவு* - நெகிழ்வு; கசிவு
7. *நசை* - விருப்பம்
8. *குழிசி* - பானை; குடம்
9. *அரம்பு* - குறும்பு
10. *கருநிலம்* - பயன்படாத நிலம்
11. *நீறு* - துகள்
12. *மிஞிறு* - தேனீ

மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 28.11.2020-க்குள், அனுப்ப வேண்டிய எண் 8695006900


*முயன்றால் விண்ணைத் தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் பெயர் பதிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*

பாசத்துடன்,

*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.
8695006900

பரிசு விவரங்கள்

பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பப்படும்

ஆரம்ப நாள் : 20-Nov-2020
இறுதி நாள் : 28-Nov-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 29-Nov-2020

கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com



மேலே