எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மகாகவியே, 'காக்கை குருவி எங்கள் சாதி காடும் மலையும்...

"மகாகவியே,

'காக்கை குருவி எங்கள் சாதி
காடும் மலையும் எங்கள் கூட்டம்'
என்று அஃறினையையும்
மனிதமாகப் பார்த்தவனே ..!

அவ்வுயர்ந்த மனிதத்தைத்
தொலைத்து
அஃறினையாய்
மாறிப்போனோம் நாங்கள்..!

வாழ்வை
இலவசத்திலும்
இணைய வசத்திலும் தொலைத்து
எங்களையே தேட நேரமின்றி
அலைகிறோம்..!

கண்ணீர் தேசத்தில்
தம் உயிரை விட்ட
எம் இனத்தை
நினைக்க நேரமில்லை எங்களுக்கு..!

இனத்துரோகிகள் சிலரின்
வார்த்தை சுயநலம் எனத் தெரிந்தும்,
ஓங்க வேண்டிய கையை முடக்கி,
ஓட்டுக்குப் பணம் வாங்கி
சிறு கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறோம்..

தமிழுக்காக, தமிழனுக்காக
ஒருவேளை உணவையாவது
நாங்கள் துறந்திருக்கிறோமா..?

எங்களுக்குத்தான் உணர்வே இல்லையே
பின் எப்படி உணவைத்துறப்போம்..?

அத்தி பூத்தாற்போல
சிற்சில சமயங்களில் இப்படி
யோசிக்கிறோம்..

எங்கே தவறினோம்,
எப்படி தவறினோம்
என்று..!

இப்பொழுதும் ஒன்றும்
கெட்டுப்போய் விடவில்லை..

சாதி வேற்றுமை கண்டு வீறு கொள்ள
உன் கோபம் கொடு..!

எங்களை ஒன்று சேர்க்க
உன் தமிழ் போல் ஒரு
எழுத்துக் கொடு..!

வறியவனுக்கு எங்கும் இரங்க
ஒரு எண்ணம் கொடு..!

இனியாவது
தமிழினம் முன்னேற
முதல் படி நான்
கட்டட்டும்..!

தமிழ் இனி
மெல்லச் சாகும் என்ற
சொன்ன வாயே
தமிழை வாழ்த்தட்டும்..

தமிழ்
இனி வீறு கொண்டு வளரும்..
தமிழன் இனி தனித்து நிற்பான்
பாருக்கு ஒளி கொடுப்பான்..

தமிழுக்கு தமிழன் வழிகொடுத்தால்
தமிழ் தமிழனுக்கு வாழ்வு கொடுக்கும்...

நாள் : 11-Sep-14, 7:11 pm

மேலே