சித்திரமே சித்திரமே - என் செம்பவள இரத்தினமே... நித்திலமே...
சித்திரமே
சித்திரமே - என்
செம்பவள இரத்தினமே...
நித்திலமே
நீயு மெந்தன்
நித்திரையை
அலங்கரித்தாய்...
கத்திரி வெயில்கூட
கால்களுக்குத் தெரிவதில்லை
கண்களினால்
குளிரச் செய்தாய்....
கனவோடு வந்தவளே
காதல் தந்து
சென்றவளே..
நினைவோடு
நின்றவளே
இளநெஞ்சிலி டம்
கொண்டவளே....
காதோர
முனுமுனுப்பில்
கவிதைப் பல
சொன்னவளே....
மனம்
களைப்படையும் வேளையிலே
இளைப்பாற
மடி கொடுப்பவளே...
முன்னம் காணாத
இன்பமெல்லாம்
காதலினால்
தந்தவளே...!