எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உணர்வலைகள்!!!! ****************************************************************************************************************************************************************************** திரு. பழனிகுமார் அவர்களின் பிறந்த தினமான...

உணர்வலைகள்!!!!
******************************************************************************************************************************************************************************


திரு. பழனிகுமார் அவர்களின் பிறந்த தினமான நேற்றைய தினம்,
அவர்தம், "உணர்வலைகள்' எனும் தலைப்பின்கண் தொகுக்கப்பெற்ற கவிதைநூல் வெளியிடு விழாவில்
கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எமக்குக் கிட்டியது!

சென்னை தியாகராயர் நகரில், கண்கவர் அரங்கம்!
அரங்க மேடையில் ஆன்றோர் சான்றோர்தம் வீற்றிருக்கை!

திருவாளர், மருத்துவர் சொக்கலிங்கம்!
நீதியரசர், திரு. இராஜேஸ்வரன்,
கலைமாமணி, திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி போன்ற தகைமையாளர்தம் சிறப்புரை!!

நம் எழுத்து தளத்துப் பெரியோர், திரு. காளியப்பன் எசேக்கியேல் மற்றும் திரு.அமிர்த கணேசனார்தம் (அகன்) வாழ்த்துக்கவி/வாழ்த்துரை!!
எழுத்து தள சகோதரி, சஹானா தாஸின் நகையுடன் (நகைச்சுவையைச் சொன்னேன் :) ) கூடிய சிறப்பான தொகுப்புரை! - என,
அருமையாய் நடந்தேறிய விழா அது!!

விழாவின்போது, திரு. பழனிகுமார் அவர்களின் பேரில், அவர்தம் குடும்பத்தினர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் கண்டுகொள்ள முடிந்தது!!
உறவுகள் நட்புகளின் திரள்வருகையில், அவர்தம் பண்பு புலப்பட்டது....!!

நூல்வெளியீடும், அவர்தம் பிறந்த நாள் விழாவும் ஒருங்கே நடைபெற, உண்மையில் இவ்விழா,
உறவும் நட்பும் சூழ உவகைத் தருகின்ற ஓர் இனிய இலக்கியக்குடும்ப விழாவாய் அமைந்துவிட்டதில் ஆச்சர்யம் இல்லை :)

மேலும், இந்நூல் வெளியீட்டுவிழா, நம் எழுத்துதள நண்பர்களைச் சந்திக்கும் நல்விழாவாயும் அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் சொல்லவேண்டும் :)

எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய திருமதி. ஷ்யாமளா அம்மா,
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய திருமதி. சாந்தி அம்மா,
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா திரு. காளியப்பன் எசேக்கியேல்
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா திரு. அகன்
அன்பு சகோதரிகள் சஹானா தாஸ் மற்றும் தாரகை
அன்பு நண்பர்கள்/திருவாளர்கள் சந்தோஷ், குமரேசன் கிருஷ்ணன் (அவருடைய தம்பியையும் அழைத்துவந்திருந்தார்), கனகரத்தினம், வினோத் கண்ணன், ப்ரியன், சதுர்த்தி, கவியரசன் (புதுவிதி செய்பவர் :) ) என நம் 'எழுத்து நண்பர் குழாத்தை' சந்திக்கும் வேளையில் பேருவகை ஏற்பட்டதென்பதைச் சொல்லவும் வேண்டுமா? :)

அன்பான அளவளாவல்கள் எம்முள் ஆனந்தமூட்டின!! மறக்கவொண்ணா விழாவாக அந்நாள் அமைந்ததை ஆழ்ந்த மனமிது உள்வாங்கிக்கொண்டது. அது,
அழிவது மிகக் கடினம் :)

இத்தகைய நல்வாய்ப்பிற்குக் காரணமான இந்நல்விழாவிற்கு ஆதாரமான, திரு. பழனிகுமார் ஐயாவும், அவர்தம், சகோதரர்களும், குடும்பமும் நீடூழி நலமுடன் வாழ, யான்வேண்டும் இறைமை அருளட்டும்!!!!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நாள் : 13-Oct-14, 10:49 am

மேலே