எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மவம்பர் மீசை' ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே...

"மவம்பர் மீசை'



ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே "மொவெம்பெர் மீசை" என்ற ஒரு காரியம் நடைபெறும் (இந்தியாவில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை). இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் விழிப்புணர்வுக்காக நடத்த படும். இந்த நாட்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் முகத்தில் மீசை வைத்து கொள்வார்கள். தவறாக நினைக்க வேண்டாம். மீசை உள்ள ஆண்கள் அந்த பழக்கத்தை தொடர்வார்கள். மீசை இல்லாத ஆண்கள் (என் போல் திருமணம் ஆன பின் மீசை எதற்கு என்று நினைபவர்கள்) மற்றும் பெண்கள் ஒரு ஒட்டு மீசை வைத்துகொள்வார்கள். இது "நவம்பர் மாதம் மீசை " என்பதால் " Movember Mustache ' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் .



சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்நாட்களில் இந்த ஒட்டு மீசை வைத்துள்ள பெண்களை பார்த்தால் மற்ற ஆண்கள் அவர்களுக்கு நன்றி சொல்வார்கள். இது ஏனெனின், ஆண்களுக்கு வரும் புற்று நோயை பற்றிய விழிப்பை, பெண்களாகிய நீங்கள் ஏற்படுத்துவதால் என்பதற்க்கான நன்றி. ஆண்கள் இவ்வாறு நன்றி சொல்லும் போது பெண்கள் பொதுவாக, 'யு ஆர் வெல்கம், அண்ட் ப்ளீஸ், கெட் யுவர் மெடிக்கல் செக் அப்" என்று கூறுவார்கள்.




இப்போது சம்பவத்திற்கு வருவோம். ஏனப்பா, எதோ மிகபெரிய காரியம் ஆனாதை போல் சம்பவம் என்கிறாயே என்று நீங்கள் கேட்கலாம். மிக பெரிய சம்பவம் மட்டும் இல்லாமல், அசம்பாவிதமும் கூட.

சென்ற வருடம் இந்நாட்களில் இந்திய நண்பர் இல்லத்தில் விசேஷம் என்று அழைத்து இருந்தார்கள். நானும், மனைவி, மக்கள் விகிதம் கிளம்பிவிட்டேன்.
அங்கே சென்று அன்பை பரிமாறி கொண்டு இருக்கும் வேளையில், என் நண்பர்கள் இருவரின் மனைவிகள் அங்கே அருகில் இருந்தனர். அவர்கள் இருவரும் வைத்து இருந்த "மொவெம்பெர் மீசை" யை பார்த்து நான் அவர்களுக்கு நன்றி சொன்னவுடன், அங்கே இருந்த மற்ற அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

நான் அவர்களுக்கு "மவேம்பேர் மீசை' நிகழ்ச்சியை பற்றி விவரமாக கூறினேன். அதை கேட்ட அனைவரும், அது எங்கள் எல்லாருக்கும் நன்றாக தெரியும், நீ சற்று அமைதியாக இரு என்றார்கள். என்னாட, இது, நல்லவிதமாக நன்றி கூறினாலும் தவறா என்று நான் நொந்து சோர்ந்து அமர்கையில், என் அருமை மனைவி என்னிடம் 'கண்ணாலே பேசி பேசி' கொன்றாள்.

நான் மெதுவாக என் மனைவியிடம் சென்று என்ன விஷயம் என்று கேட்டேன், அதற்கு அவள், உடனே நேராக அந்த ரெண்டு பெண்களிடம் சென்று என்னை மன்னிப்பு கேட்க்க சொன்னாள். நான் அதற்க்கு நான் நல்லவிதமாக தானே நன்றி சொன்னேன், அதற்க்கு ஏன் மன்னிப்பு என்றேன். அதற்க்கு என் மனைவி பதிலாக,

'சரியான மக்கா இருகின்றீர்களே",

"அவங்க ரெண்டு பேரும் ஒட்டு மீசை வைக்கவில்லையாம்" என்று போட்டாளே ஒரு குண்டு...."

www.visuawesome.com

பதிவு : விசு
நாள் : 12-Nov-14, 11:48 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே