எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

HIOX நிறுவனத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ============================================== நவம்பர்...

HIOX நிறுவனத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
==============================================

நவம்பர் திங்கள் பதினேழினிலே - ஹையாக்ஸ்
அகவை பதினொன்றை தொடும் அறிவீரோ
எழுத்து தளத்தின் ஆணிவேர் - அதனை
வாழ்த்திட அனைவரும் வாரீரோ!!!

*கணக்கு, நட்பு, செய்திக்கென்று - இதன்
விழுதாய் பரவிடும் பல இணையதளம்
இந்நிறுவனம் ஆற்றும் சேவைகளை
எண்ணிக்கையில் சொல்ல விளங்கிடுமோ??

பல்லாயிரம் வாடிக்கை யாளர் கொண்ட
மென்பொருள் வளர்த்திடும் நல்ல மையம்
நாளும் நாளும் அது வளர்ந்தே
வாழ்வின் சதமுமெட்டி சிறப்புறுமே !!!

மென்மேலும் ஹையாக்ஸ் சிறப்புறவே
தர வரிசையில் முன்னிலை பெற்றிடவே
ஆலம் விழுதாய் படர்ந்து தழைத்திடவே
வாழ்த்திடுவோம் நாம் அனைவருமே!!!

இந்நிறுவன வளர்ச்சி பின்னணியில்
பணியாற்றிடும் அத்தனை குழுமங்களும்
ஹையாக்ஸுடன் வளர்ச்சி கண்டிடவே
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்களே...


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகவை பதினொன்றை தொடும் ஹையாக்ஸ் நிறுவனத்திற்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹையாக்ஸ் நிறுவனத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் நிர்வாக இயக்குனர் திரு ராஜேஷ்குமார், இயக்குனர்கள் திருமதி சுகன்யா ராஜேஷ்குமார் & திரு செந்தில்குமார் மற்றும் எழுத்து இணையதளத்துடன் பிற இணையதளத்தின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அலுவலர்களுக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சொ.சாந்தி

பதிவு : C. SHANTHI
நாள் : 16-Nov-14, 9:16 am

மேலே