எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடல் பருமன் சுட்டு (Body Mass Index) உடல்...

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.
எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000
(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)

உடல் பருமன் சுட்டு கணக்கிட BMI Calculator

உடல் பருமன் சுட்டு அட்டவினை

நாள் : 3-Dec-14, 11:36 am

மேலே