எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெளனம் உரைத்தாள் புன்முறுவல் போதித்தாள் மர்மம் பேசினாள் பூத்து...

மெளனம் உரைத்தாள்
புன்முறுவல் போதித்தாள்
மர்மம் பேசினாள்
பூத்து நழுவினாள்
விழிவழி மொழிந்தாள்-மயக்க
களி ஊட்டினாள்
உணர்வம்பு எய்தாள்
நாணம் நசுக்கினாள்-சிக்கிய
இதழ் மீட்டெடுத்தாள்
காமம் விளக்கினாள்
மொழியற்று கிடந்தாள்-மெள்ள
மோக மூச்சுற்றாள்
நரை கிள்ளியெறிந்தாள்
வாய்கண் கொண்டாள்
ஐம்புலன் சுவைத்தாள்
சிரம் பாரம் அளந்தாள்
இரு உடல் இடை-வெளி
ஆடை இழந்தறியாது
கரைந்தாள் அவள் சிரித்து
நின்றான் அவன் சிவந்து

- பால்யம் முற்றும்

நாள் : 17-May-15, 4:11 am

மேலே