எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊன் கலந்து உயிர் சேர்த்து உணர்வு பிசைந்து உண்மையாய்,...

ஊன்
கலந்து
உயிர் சேர்த்து
உணர்வு பிசைந்து
உண்மையாய்,
நான்
எத்தனை
முறைதான்
எழுதுவது நிறைய
கவிதைகளை...!!

வான்
பறந்து
தாக்கி அழித்த
வரலாறு குருதியாறு
ஒடியதே....!!
தேன்
சுவை
தீங்கனிச் சாறெனும்
மழலைக் குவியல்
அழிந்ததே...!!!

கூன்
குருடு
குள்ளமும் குறுங்கழுத்துமென
கள்ள கயவர்கள்
போதியை,
ஏன்
இப்படி
மீறி ,வக்கிரத்திலூறி
வம்சம் அழித்தனர்.
ஒழித்தனர்....!!!

மீன்
நீந்தும்
நீலக்கடலடி நீளாழத்தில்
செந்நிறப் பொட்டுக்கள்
எப்படி
ஏன்
வந்தன
வா தோழா வகையாய்
வழி காண்போம்
வம்சம் தழைக்கவே....

பதிவு : agan
நாள் : 17-May-15, 5:06 pm

மேலே