பெரியாரும் இளையராஜாவும் ! 2006-ல் பெரியார் படத்துக்கு இசையமைப்பதற்காக...
பெரியாரும் இளையராஜாவும் !
2006-ல் பெரியார் படத்துக்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகினார் இயக்குநர் ஞான ராஜசேகரன். அப்போது அவர் , '' கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்; நான் தெய்வபக்தி உள்ளவன் '' என்று இளையராஜா சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்ட பாஜக வின் இல.கணேசன் உள்ளம் குளிர்ந்து ஒரு அறிக்கை விட்டார்.
'' இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார்.
ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர்.''
தமிழ் நாட்டிற்க்காக பெரியார் செய்த நன்மைகள் பற்றி ஒன்று கூட தெரியாமல் , அவரை ஒரு கடவுள் மறுப்பாளராக மட்டுமே அறிந்து கொண்ட , இந்து மதத்துக்கு காவடி தூக்கும் அரைவேக்காட்டு ஞானிகள் பெரியார் படத்துக்கு இசையமைக்காமல் இருப்பதே பெரியாருக்கும் அவர் கொள்கைகளுக்கும் உகந்தது.