வணக்கம்..... இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக் கொள்ளளலாம்.......
வணக்கம்..... இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக் கொள்ளளலாம்.... எனக்கும் நீங்கள் கூறிய அந்த ஜை சக் ஆட்களுக்கும் நிறைய வேலை இருக்கிறது.... படிக்க, எழுத, உண்மையாக படைப்பை மட்டும் விமர்சிக்க இன்னும் ஏராளமான பணிகள் உண்டு.. அதற்கிடையில் வீண் விதண்டாவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை செலவழிக்க எனக்கு விருப்பம் இல்லை... என் தோழர்களின் கவனமும்.. இந்த பிற்போக்கு,மற்றும் பின்தங்கிய மனநிலைக்குள் நின்று விட நான் விரும்பவில்லை....
தோழரே, இது ஜை சக் போடுகிற கூட்டம் இல்லை.. எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று கூடி..... ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்து எங்களை நாங்களே உற்சாகப் படுத்தி மீண்டும் எழுத, மீண்டும் படிக்க ஏற்பட்ட தானாக அமைந்த கூட்டம்... யாரும் யாரையும் எந்த கூட்டணியிலும் சேர்க்க முடியாது...சேர்ப்பதும் கிடையாது.... அவரவர் மனம் சார்ந்த விருப்பம் சார்ந்த அமைப்பில் யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்... அது அவரவர் தனிப் பட்ட விருப்பு.. அதற்காக ஜை சக் கூட்டம் என்று கூர்வதில்தான் பேனா பிடித்த மனதில் அருவா கூறும் வார்த்தைகள் பிறக்கிறது....(இதையும் தவாறாக புரிந்து கொண்டு ஒரு பக்கத்துக்கு எழுதக் கூடாது )
இந்த எழுத்து தளம்... நமக்கு கிடைத்த வரம்.. இதை சரியாக பயன் படுத்திக் கொள்வதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது......... மற்ற படி அவரவர்க்கான உயரம் அவரவரிடம்தான் இருக்கிறது.... மீண்டும் கூறுகிறேன்....என் படைப்பை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு....உங்களுக்கும் உண்டு...ஏன் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் உண்டு... ஆனால் என்னை விமர்சிக்க யாருக்கு உரிமையை தரலாம் என்பதை நான்தான் முடிவெடுக்க வேண்டும்.... ஏனெனில் என் வாழ்வு.. என் தூரம்.... என் சிறகு.... இன்னும் சொல்லப் போனால் என் வானம்........
என் கடவுள் என் வீட்டுக்குள் எனக்கு சேவகமும் செய்வார்..
என் மீது தனிப்பட்ட கோபம் ஏதும் இருப்பின் தனி விடுகையில் வாருங்கள்... பேசித் தீர்த்துக் கொள்ளலாம்... அதை விடுத்து தேவையே இல்லாமல் சிறு பிள்ளைத்தனமாக தளத்தில் இருக்கும் அனைவரையும் ஜை சக் என்று கூறுவது அழகல்ல..முதிர்ந்த படைப்பும் இங்கு வரும்.. ஆரம்ப கட்ட படைப்பும் வரும்.. இரண்டையும் அவரவர்க்கான இடத்தில் நின்று பார்த்து விமர்சிக்க வேண்டும்....ஒரு வரையோடு.... வரையறை இல்லாத விமர்சனம் கூட இலக்கியத்தை வாழ வைக்காது..... தோழரே..... மீறி இந்த பிரச்சனையை நீட்டித்தால் நான் தளத்தின் உதவியை நாட வேண்டி வரும்....இது ஒரே இனம்...தமிழ் இனம்..... இனம் இனத்தோடு சேர்கிறது.... ...இதில் கூட்டு சதியோ.. ஜை சக்கோ தேவையே கிடையாது.... எங்களில் பல பேர் வெற்றி தோல்வி கடந்து விட்டவர்கள்.... எனக்கெல்லாம்.. ரெண்டுமே "இந்தா...... அங்க கிடக்கற அது...." நான் போக நினைக்கும் உயரம் வேறு தோழரே.... அது நீங்கள் நினைக்கும், எழுதும் கவிஞர்கள் பட்டியலில் இல்லை...
இல்லை இதற்கும் மேலேயும் போட்டி வைத்து கொள்ளலாம் என்றால் தினம் ஒரு கவிதை போடுவோம்...தினம் ஒரு எழுத்தாளன் பற்றி விவாதிப்போம்... தினம் கட்டுரை போடுவோம்.... யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்..... திஸ் இச் ஓபன் சேலஞ்...
என் இனிய அன்பு தோழர்களே.. இதை இதோடு விட்டு விடுவோம்........ நமக்கு வேலை இருக்கிறது..... வாழ்க தமிழ்.... வளர்க எழுத்து...
ப்ரியமுடன்....
கவிஜி (பிற்போக்குவாதி)