நாவற்பழம் - பயன்கள் கருமை கலந்த நீலம் நிறமுடைய...
நாவற்பழம் - பயன்கள்
கருமை கலந்த நீலம் நிறமுடைய அழகிய சிறு பழம். இதை நாகப்பழம் என்றும் அழைப்பதுண்டு. இந்த பழத்தின் பருவகாலத்தில் பள்ளிக்கூடங்கள் வாயிலில் காணலாம். மாணவ, மாணவிகளால் அதிகமாக ஈர்க்ப்படும் பழம் இது. பழத்தோடு சிறிதளவு உப்பையும் கலந்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி.
இது குளிர்ச்சி தன்மையுடைய பழம். நாவற்பழ சுவையால் ஈர்க்கப்பட்ட பலர் அளவுக்கு அதிகமாக உண்பதுண்டு. இது தவறு. இப்பழத்தை அளவோடு உண்ணவேண்டும். நன்மையும், தீமையும் கலந்ததே இப்பழம் என்பதை உணரவேண்டும்.
இப்பழம் துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை உடையதாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று இப்பழத்தை முக்கியமாக வைத்து வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.இப்பழத்தில் குறைவான வைட்டமின் சத்துக்களும், சில தாதுப் பொருள்களும் இதில் இருக்கின்றன. இது அதிக சிறுநீர் கழிவை தடுக்கும். சீத பேதி,ரத்த பேதி போன்ற நோய்களை குணமாக்கும். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடக்கூடாது என்பார்கள் ஆனால் இந்த நாவல் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடாலம். இப்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. நாவற் பழத்தை உண்டபின் அதில் உள்ள கொட்டையை வீசி எறியாமல். அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு அரைத்து தூள் செய்து கொண்டு அத்தூளை காலை மற்றும் மாலை சுத்தமான நீரில் கலந்து பருகிவர நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மூலநோயை நீக்கும்,வாயுவைப் போக்கும், கல்லீரல் நோயை அகற்றும், கணையத்தில் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும். இப்பழத்தை அதிகமாக உண்பதால் தொண்டை தொடர்பான நோய்களை உருவாக்கும்.குடலில் கோளாறுகளை உண்டாக்கும் எனவே அளவோடு உண்ணவேண்டும்.
இன்றைய காலத்தில் சுவைக்காக ஃபாஸ்ட் புட் என்று சொல்லப்படும் உணவகங்களில் மற்ற சில உணவகங்களிலும் சென்று சாப்பிடும் மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த உணவில் அதிக காரம் மற்றும் உப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் மூல நோய் இவர்களை பாதிக்க அதிகமாக வாய்ப்புள்ளது. தினமும் நான்கு அல்லது ஐந்து நாவற்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோய் கட்டுப்படும்.
நாவற் பழத்தில் விதையை நீக்கிவிட்டு , அதில் சாறெடுக்க வேண்டும். இச்சாறோடு சிறிதளவு பன்னீர் மற்றும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து காலை-மாலை பருகிவந்தால் இந்த நோய் கட்டுப்படும்.
இப்பழத்தில் புரதம் 0.7 மில்லி கிராம்
சுண்ணாம்புச் சத்து 15 மில்லி கிராம்
இரும்புச்சத்து 1.2 மில்லி கிராம்
நாவற்பழ பருவ காலங்களில் இப்பழத்தை அளவோடு சாப்பிட்டு உடல் நலத்தை பேணிக் காப்போம்.