எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு...

அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பீஜிங்: சீனாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து நெருப்பு உருவானது. சீனத் தலைநகரான பீஜிங்கில் வசந்தகால தொடக்கத்திற்கான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 58 வயது பெண் ஒருவர் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். வயிறு முட்ட முட்ட சாப்பிட்டதில் அந்தப் பெண்ணின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியது. பெண்ணின் வயிற்றில் இருந்த எதில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையை சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக ஹாவ் மேலும் கூறினார்.

நாள் : 10-Feb-14, 2:16 pm

மேலே