எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது இனிய நண்பர்கள் இருவருக்கு இன்று இனிய பிறந்தநாள்...

எனது இனிய நண்பர்கள் இருவருக்கு
இன்று இனிய பிறந்தநாள்

இலங்கையிலிருந்து ஒரு தமிழன்
இந்தத் தளத்தில்
இணைந்த தினத்திலின்று
என் இனியவன் என்றாகிய
விக்கிரமவாசன்
என் இனியத்தோழர்களில் ஒருவர்.
நட்பென்றால் நம்பிக்கை வேண்டும்
எந்நேரத்திலும் நம்பிக்கை கொடுக்கவேண்டும்
எந்தச்சூழலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
என சொல்லாமல் உணர்த்திக்கொண்டிருக்கும்
என் நட்பின் நம்பிக்கை நட்சத்திரமாம்
விக்கிரமவாசனுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இந்தியத்தேசத்திலிருந்து ஒரு தமிழன்
இவன் எனதினிய தம்பி.
என்றென்றும்
பகுத்தறிவுக்கொள்கையின் இரும்புக்கம்பி.
தப்பு என்று பட்டால்
சட்டென்று எழுத்துவாள் வீசி
சதக்கென்று கருத்து வீசும்
அஞ்சா நெஞ்சகமுடையவனாம்
அருமை கவிஞனாம்
சே.குவேராவின் நேசகனாம்
எனதருமை கோபி-க்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். !


வாழ்க .. நீங்களிருவரும்
எல்லா வளமும்
எல்லா நலமும்
பெற்றுத் திளைத்து
நிம்மதி செல்வதோடு
வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
**
-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 24-Jul-15, 4:18 pm

மேலே