எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நன்றி: தினமலர். ஜனாதிபதியாக இருந்த போதும், அதன்பின்னும் தான்...

நன்றி: தினமலர்.
ஜனாதிபதியாக இருந்த போதும், அதன்பின்னும் தான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில், தன்னை தனியாக அடையாளப்படுத்தும் நாற்காலியை கூட விரும்பாதவராக இருந்தார், அப்துல் கலாம். இதனாலேயே, மக்கள் ஜனாதிபதியாக விளங்குகிறார்.

அப்துல் கலாம், சில ஆண்டுகளுக்கு முன், வடசென்னை சுங்கச்சாவடி அருகே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். மேடையில், அவருக்கு மட்டும், 'வெல்வெட்' போர்த்திய நாற்காலி இருக்க, மற்றவர்களுக்கு மர நாற்காலி போடப்பட்டிருந்தது.

இதை கவனித்த கலாம், 'எனக்கும் மர நாற்காலியே போடுங்கள்' எனக்கூறி, 'வெல்வெட்' நாற்காலியில் அமர மறுத்தார். ஜனாதிபதியாக இருந்த போது, குரோம்பேட்டையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற கலாம், தன் பாதுகாவலருக்கு நாற்காலி போடப்படாததை கவனித்தார். அவருக்கும் நாற்காலி போட வலியுறுத்தி, அவருக்கு நாற்காலி போட்ட பின்னே, கலாம் அமர்ந்தார்.

நாள் : 29-Jul-15, 7:34 pm

மேலே