எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலத்தின் கடை நொடி வரை பணிசெய்த கலாம் ஐயாவுக்கு.......

காலத்தின் கடை நொடி வரை பணிசெய்த கலாம் ஐயாவுக்கு....

தங்களை எம்மி்ள் ஏனையர் கண்டது இல்லை. தாம் நினைவிழந்து சரிந்ததாய் அறிந்த நிமிடம், நாங்கள் உணா்விழந்து அதிர்ந்து போனோம். செய்தித்தாள் தான் காண்பித்தது தங்களின் 83 அகவையை. தங்கள் விருப்பப்படியே பிரியாவிடையும் பெற்று விட்டீர்கள். கற்பிப்பதையே விருப்பப் பணியாய் செய்தீர்கள், செய்வீர்கள். ஆம், நாங்கள் தங்களிடமிருந்து இன்னும் கற்று கொண்டுதான் இருக்கிறோம். தாங்கள் விண்ணுலகம் சென்றதாய் அறிந்த இரவு, உறக்கம் மறந்தன விழிகள். இமை தாண்டி கசிந்த கண்ணீரி்ன் சுவடுகளுடன் யான் அயர்ந்த பொழுதில் கண்ட கனவில், தங்கள் இறுதிமேடை மயக்கச்சரிவிளிருந்து இயல்பாய் எழுந்தருளி, தங்களின் தோட்டத்து செடிகளுனூடே உலா வந்து புன்னகை பூத்தீர்கள். நேற்றைய எம் கனவில் நீவீர் வந்ததது... இன்றைய இளைஞர் கானும் கனவில் நாளைய அப்துல்கலாம்கள் உயிர்பிக்கப்படுவதை உணர்த்தவோ...?

கனவு காண்போம் ஐயா நாங்கள்... கனவு காண்போம்....

பதிவு : ADHAVAN
நாள் : 30-Jul-15, 11:24 am

மேலே