அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த...
அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
இங்குள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்பவர், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வந்த அவசர அழைப்பையடுத்து, ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சிக்கிய ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இருக்கும் தேசியக் கொடிகளை எல்லாம் அரைக் கம்பத்தில் பறக்க விடும்படி அம்மாநில கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இங்குள்ள அனைத்து தேசியக் கொடிகளும் நேற்று (வெள்ளிக்கிழமை) அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
நன்றி ; தளம்