கணபதி சரணம் அப்பன் இல்லாதவனேஅம்மையின் அழுக்கு தெப்பத்தில் வந்தவனே...
கணபதி சரணம்
அப்பன் இல்லாதவனேஅம்மையின் அழுக்கு
தெப்பத்தில் வந்தவனே தேவ நாயகனே
சுப்பனுக்கு சோதரனே சுடரும் கற்பூரனே
அப்பழுக்கற் றவனே அண்டதே வரும்சரணே
ஆதிமுதலா னவனே ஆனைமுக மானவனே
வேதவிற் பன்னனே விநாயகனே போற்றி
தனியானவ னேதளிர்க்கொடி கரம்பற் றாதவனே
எலிவாகன னேஎளிமை யானவனே போற்றி
அருகம்புல் அண்ணனுக்கு ஆரத்தி எடுங்கடி
வரும்துயர் அத்தனையும் வற்றச் செய்வானடி
மறை நாயகனின் மனைவி காவலனுக்கு
நிறையசாற் றுங்கடிநெய் பணியார கொழுக்கட்டை
ஈகை குணத்தனவனை ஈசன்விளை யாட்டவனை
வாகை மாலையனை வாடா மலரவனை
யோகம் தருபவனை தாகம் தீர்ப்பவனை
பாகப் பிரிவின்றி பாதம் பற்றுங்கடி..
சுசீந்திரன்.