எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவில் மிளிரப்போகும் கனவுகளுக்கு.. தூக்கத்தை நெய்யத்துவங்கிவிட்டேன்.! அணைத்துறங்க பொம்மையோ...

இரவில் மிளிரப்போகும் 

கனவுகளுக்கு..
தூக்கத்தை நெய்யத்துவங்கிவிட்டேன்.!
அணைத்துறங்க பொம்மையோ
கணவனோ இல்லை..!
ஜன்னல் மோதித்திரும்பிப்போகும்..
காற்றுக்கு ஊடே..
இரவும் நுழையமுடியாதபடி..
தன்னை ஒரு பாடலாக வெளியில்..
சொட்டிக்கொண்டிருக்கிறது.!
நிலவின் பயணம் கூட ஒரு விண்மீனை
தேடுவதாக இருக்கிறது.
நான் மட்டுமே விழித்திருக்கும் இரவில்
என்னோடு இருப்பது
முற்றுப்பெறாத சில கவிதைகளும்..
முற்றுப்பெற்ற சில உறவின் 
நினைவுகளும் மட்டுமே.!
விழி தீண்ட விழித்திருக்கும் கனவுகளை..
பலி போட காத்திருக்கும் பருவத்தை..
கலந்தாட காத்திருக்கும் காதலை ..
அறைக்குள் சுற்றும் ஆறேழு கொசுக்களோடு..
விரட்டிவிட்டேன் அதனையும்.!



பதிவு : வசந்த நிலா
நாள் : 14-Sep-15, 11:28 pm

மேலே