எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அடாது மழையிலும் விடாது எழுதி தள்ளும் மூஞ்சி புக்கு...

அடாது மழையிலும் 

விடாது எழுதி தள்ளும் 
மூஞ்சி புக்கு சுகவாசிகள் . 

எல்லாரும் உதவி செய்ய சொல்லி அறிவுரை சொல்றாங்க.. 
எல்லாரும் பொது ஜனங்க மேல கருணக்காட்டுறாங்க
எல்லாரும் இயற்கை  அழிக்கா நல்லவனா இருக்காங்க

பாருங்க.. பாருங்க.. 
மூஞ்சிபுக்குல... தான்
அம்புட்டும் பேரும் இருக்கானுங்க.. 
இருக்காளுங்க..

என்னங்கடா டேய்.. கலர் கலரா பேசுறீங்க..


திருடனுங்களே  திருட்டுப்போனதற்கு கவலபட்டானுங்களாம்.. அந்த கதையால இருக்கு.

போங்க   எதாவது உதவி கிதவி செஞ்சிட்டு.. அத படம் புடிச்சி.. மூஞ்சி புக்குல போட்டு காட்டுங்க..


யோவ் குரங்கு.. நீ மட்டும் என்ன செய்றன்னு கேட்பீகளல.
அய்யோ.. அய்யோ நானும் ஒரே குட்டையில் ஊறின மட்டைதானுங்களே!


-குரங்கு குட்டி. 

நாள் : 2-Dec-15, 1:26 pm

மேலே