எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உழவன் உலகுக்கு அன்னம் அளித்தவனே .... உழைப்புக்குச் சின்னம்...

உழவன் 


உலகுக்கு             அன்னம்                 அளித்தவனே ....உழைப்புக்குச்      சின்னம்                  கொடுத்தவனே ....சேற்றுக்கும்       வண்ணம்               தந்தவனே ...!!உன்னுடைய      எண்ணம்,               அதை விளக்கவே ..இக்கவியை      என்கரத்தால்          கதைக்கிறேன் ..!!
பொங்கும்  காலைப்பொழுதில் ,     குயில்கள்            இசையிட ...நுனியில்   தேங்கி நின்று,    புல்லிற்குப்பனித்துளி    அழகிட ...தன் காலை,    அதன்மேல்  பதித்து ,   சுகம்கண்டு, அகம்   மலர்ந்த   காலங்கள்  மறைந்ததோ !!

உன்வீட்டின் அடுப்பில் எரியும் நெருப்பு,   உன் வயிற்றில் எரிய ....பருவமழை விண்ணில் பெய்ய மறுத்து,மாறாகஉன் கண்ணில் அது பொழிய ,,,,!!உன் வயிற்றில் எரியும் அக்னி கனல்களை அது தணிக்குமோ??

அண்டை நாட்டுக்காரன் நீர் தரவில்லை ...எனினும் நீ மனம் தளரவில்லை .....பன்னாட்டுநிறுவனமோ  உன்னைத்  தொழில்  செய்யவிடவில்லை.....உன்னிடம்    பயின்றபயிர்களோ   உன்னைப்போல்   வாடவில்லை ...

உணவோடு   நல்லஉணர்வையும்   அறுவடை   செய்தவனே ...!!!உன்தொழில்மேல்   நீ கொண்டுள்ளாய்     அளவில்லாமோகம் ...அதனால்தான்   ஏற்பட்டதோ  உனக்குஇந்த   முடிவில்லாசோகம்...

வாடிய பயிரை கண்டபோதேல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூற கேட்டிருக்கிறேன் ...!!வாடிய பயிரோடும் ....உன்னோடும், சேர்ந்து நானும் வாடியும் இருக்கின்றேன்  ...!
உழவா! தன்னம்பிக்கைக்கு இலக்கணம் ஆகினாய் .!!மக்கள் மறுக்கவளம்உண்ணக் காரணம்   ஆகினாய்....
ஊட்டியவனுக்ககே   உணவு இல்லாததால் ...உன் எண்ணமோ எமனை நோக்கி ...நீ எமனை நோக்க... நாங்கள் எவனை நோக்கி ..எங்கள் வாழ்வு சார்ந்து இருப்பதோ உன்னை நோக்கி ...


உழவன் எனப்படும் தவப்புதல்வனே ...


நீ இல்லையென்றால் தெரியும்உன் அருமை...நீ செய்யும் தொழிலோ பழமை .....அதற்கு உள்ளதே கோடிப் பெருமை...நீ அடையக்கூடாது   என்றும்  சிறுமை..உனக்கே உண்ணவில்லை என்றால் பதுமை..நீ காண வேண்டியதெல்லாம் புதுமை...
உன்னை பற்றி எழுதுவதேஎன் கவிப்புலமை.. 
உன் விடியலை நோக்கி என்றும் ....

                                                                                     -சு .நவீன் நிவாஸ் 


நாள் : 23-Feb-16, 1:41 pm

மேலே