எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறவுகள் மேம்பட…!! 1. நானே பெரியவன், நானே சிறந்தவன்...

                    உறவுகள் மேம்பட…!!   1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை ( Ego ) விடுங்கள் 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை   விடுங்கள் ( Loose Talk ) 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள்.   ( Diplomacy )விட்டுக் கொடுங்கள் ( compromise ) 4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும்    என்பதை உணருங்கள் ( Tolerance ) 5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம்     உண்டோ,  இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 6. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்    கொள்ளுங்கள். ( Flexibility ) 7. மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான   சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். ( Courtesy ) 8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட   நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள். 9. பிரச்சனை ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும்   என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கும் கலை ” – நூல். தகவல் ; ந.க.துறைவன். * ash��x[�8+

பதிவு : துறைவன்
நாள் : 10-Jul-16, 8:24 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே