எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புண்ணாற்றுப்படை மலை முகடுகளில் முகிலிடை படுத்துறங்கிய நேசம் என்னுள்...

புண்ணாற்றுப்படை
 
மலை முகடுகளில் முகிலிடை
படுத்துறங்கிய  நேசம்
என்னுள் பிரவகிக்கிறது.
நரனும் மாமிசனும் என்னை பிய்த்துத்தின்ன
 வரிசையில் நிற்கிறார்கள் 
காகிதத் தாள் வீரர்கள்
கணம் தோறும் காப்பாற்றி
தியாகி ஆகிறார்கள்
என்னை தியாகி ஆக விடாமல் .
வெல்ல பெட்டியிடை 
ஊறிச் சென்ற எறும்புகள்
மொத்தம் திரும்பி வந்தன சொந்த ஊர்
எனக்கான நான்கு பேர்கள்
எப்போதும் வரலாம்
அப்போதாவது அந்த நால்வரில் ஒருவனாக
அன்பான வாசகனே
உன்னை ஆராதிக்கிறேன்.
அகம் துறந்து புறமழித்து திரும்பிப் பார்
அருகாமையில் நானிருப்பேன் .
அப்போது அது அரும்புகள் பனிசொட்டும்
அதிகாலைப் பொழுதாக இருக்கும்.

சுசீந்திரன்.

நாள் : 28-Jul-16, 5:33 pm

மேலே