நெஞ்சு பொறுக்கவில்லை புவியில் தோன்றிய உயிரினங்களிலேயே கடைசியாகத் தோன்றிய...
நெஞ்சு பொறுக்கவில்லை
புவியில் தோன்றிய உயிரினங்களிலேயே கடைசியாகத் தோன்றிய பேரினம் மனித இனம். எல்லோருக்கும் பின் வந்த நாம் அனைத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.ஏற்கனவே இருந்த ஒன்றை நம்முடையதென மார் தட்டிக் கொள்வது அறிவீனம்.அதுவும் தன் இனத்துக்கே தருவதில்லை என இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி பேதைகளாய் சக மனிதனை,உயிரினை துன்புறுத்தும் இழிச்செயல் ஐந்தறிவு உயிரினத்திலும் இப்பார் கண்டதில்லை.
கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
என உறுமிய பாரதியின் கனவு பொய்த்துவிட்டதோ?!
இதுவா நாம் கண்ட கனவு? நாம் அடையவேண்டுவன இன்னும் எவ்வளவோ இருகின்றதல்லவோ?!!
தனி ஒருவனுக்கிங்கு உணவில்லை என்றால்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார்.
இங்கோ உழுது,நீர் பாய்ச்ச நீரை தந்ததற்கே,நிகழ்ந்தது ஓர் பிரிவினைப் புரட்சி,எதிர்வினையாக!!
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட எம் நாடு,இப்போது வேற்றுமை படுத்தி உயிர்வதைக்கக் காண்கிறது!
தன் உயிர் போன்று பிறரையும் நேசித்த எம்மக்கள் இன,மத,மொழி,நாடு வேறுபாடு காட்டி வதைக்க படுகிறார்கள்.இஃது பொருத்தமில்லை,பொருந்தவுமில்லை.
மனிதமே மீண்டெழு!
மெய் நிலை உணர்.
மனிதத்தை மீட்டு எழு,மனிதம் கொண்டு.
விழித்திடு- இல்லையேல்
நாம் எழுவதற்குள் பஞ்ச பூதமும் நம்மை பொய்த்துவிடும்,பொசுக்கிவிடும்!
அன்பும்,அறமும்
அறிவும்,நட்பும்
உண்மையும்,நேர்மையும்
நேசமும்,பாசமும் கொண்டு தான் வாழந்து,பிறரையும் வாழவிடு
வீடு மகிழ்ச்சியாகும்,சமூகம் ஒன்றுபடும்,நாடு செழிப்பாகும்,உலகம் அமைதியாகும்.
இல்லையேல் நாம் வீழ்வதிலிருந்து நம்மை நாமே காப்பற்றிக்கொள்ள இயலாது!
ச.லோகேஸ்கண்ணன்.