எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜெயோ டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் @@ >>>>>>>>>>>>>>>>>>>>>...

                          ஜெயோ டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்


 @@ 

>>>>>>>>>>>>>>>>>>>>> வாட்ஸப் வறுவல் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 @@@@ 

 ஜெயோ டிவி புத்தாண்டு நிகழ்ச்சிகள் விவரம்: 

 @@ 
 காலை 6 மணிக்கு: 
 சின்னம்மா அருளிருக்கும்….வேதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு
 @ 7 மணிக்கு: 

சந்தியா அம்மாவுக்குப் பிறகு, அம்மாவுக்கு அன்னையாக திகழ்ந்தவர் என்பதால்தான் அவரை சின்னம்மா என்று அழைக்கிறோம்’ - உஷார் கே. சாமியின் சிறப்பு பேட்டி.

 @ 8 மணிக்கு:: 

தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு ராசி பலன் – ‘சின்னம்மா முன்னால் இனி குனிந்து நடக்கலாமா, தவழ்ந்து நடக்க வேண்டுமா? சின்னம்மாவின் ஆசிபெற்ற ஜோதிடர் வழங்கும் சிறப்புப் பரிகாரங்கள். 

 @ 9 மணிக்கு: 

 சின்னம்மாவைப் புகழ்ந்து கங்கை அமரனின்   இன்னிசைக் கச்சேரி 


 @ 10 மணிக்கு: 

 திராவிடக் கொள்கைகளின்  ஆணிவேர் அம்மாவா? சின்னம்மாவா? குண்டு கலயாணம் தலைமையில் சிறப்புப் பட்டி மன்றம்: 

 @ மதியம் 12 மணிக்கு: 

75 கோடி எப்படி… எப்படி? ராம மோகன ராவ் வழங்கும் சுவராஸ்யமான பெட்டி. ஸாரி,  பேட்டி

@@@
. 1 மணிக்கு: 
 அம்மா எத்தன இட்லி சாப்பிட்டார்? சின்னம்மா கூடவே இருந்த நடிகை சி.ஆர். சரஸ்வதி தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
 @@@
 @ மாலை 5 மணிக்கு:
 
சிறப்பாக கும்பிடுவது  போடுவது எப்படி.? கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் குனிந்தபடி பின்னோக்கி நடக்கும் வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள் !

@ 6 மணிக்கு: 

சிவபெருமான் என் கனவில் வந்து சின்னம்மாதான் அடுத்த முதல்வர் என்று சொன்னார்’ – மதுரை ஆதீனம வழங்கும் பக்திமணம் கமழும் ஆன்மீக அதிரடிப் பேட்டி..

 @ 7 மணிக்கு: 

தந்தைப் பெரியாருடன் சின்னம்மா இணைந்து சமூகநீதிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபட்டதை பெருமித்துடன் நினைவு கூர்கிறார் வீரமணி.   

 @ 8 மணிக்கு: 

 சின்னம்மா முதல் முறையாக நமக்காக தனது காந்தக் குரலில் அளிக்கும் சிறப்பு பேட்டி

 @ 9 மணிக்கு: 

 இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘சின்னத்தாய்’

 சிறப்புத் திரைப்படம்.   

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 காண முடிந்தால் காணத் தவறாதீர்கள்!   @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்,  சனி, டிசம்பர்  31, 2016, பக்கம் 10. புதுச்சேரி பதிப்பு.      Y�� b��y�

பதிவு : மலர்91
நாள் : 1-Jan-17, 8:11 am

மேலே