தொட்டுவிடும் தூரம்தான் வானம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மொட்டை...
தொட்டுவிடும் தூரம்தான் வானம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மொட்டை மாடியில்
தன்னந் தனியாக நின்று
கொண்டு எண்ணிலடங்கா முறை
வானமதை எட்டிப் பிடிக்க
நான் முயன்று கொண்டிருக்கிறேன்...
ஆனால் அதை நான்
தொட்டுவிடக் கூடாதென்றே
என் விரல்களுக்குத்
தட்டுப்படாமலே மேல் நோக்கி
நகர்ந்து கொண்டே இருக்கிறது...
முயற்சி திருவினையாக்கும்
என்பதில் உறுதியாய்
இருக்கிறேன்...
தொடும் தூரம் இன்னும்
குறைவாகவே உள்ளதென்று
உள்ளத்தை உறுதியாக்கி...