#JusticeForNandhini ஆண்களே என் அப்பனும் ஆண் தான்... என்...
#JusticeForNandhini
ஆண்களே
என் அப்பனும் ஆண் தான்...
என் அண்ணனும் ஆண் தான்... எல்லா ஆண்களும் ஆண்கள் இல்லையே...
உங்கள் வீட்டு பெண்களுக்கு இந்த பெருமையை தாருங்கள் ........
################################
பெண்களுக்கு என்ன குறைச்சல் என்று சொல்லும் ஆண்களே பெண்களின் வலியை பெண்கள் தான் அறிவார்கள் ..... குழந்தை பெற்று கொள்ளும் வலியையோ மாத விடாயயோ சொல்ல வில்லை .....தினம் தினம் பெண்கள் அனுபவிக்கும் பேருந்து எரிச்சல்கள் .....ஆண்களின் பார்வை போகும் வழி.....பேசும் பேச்சுக்கள் .....செய்யும் செய்கைகள் .....கொன்று புதைத்து விடலாம் போல் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ...
பாவம் அவளை பெற்ற தாயின் மனம் என்பதால் வாழ்கிறீர்கள் காமுகர்களே ..... 33%எல்லாம் வெறும் கண் துடைப்பு தான் ஆனால் அதுவே இன்னும் கிடைக்க வில்லை ...இதில் சில பேய் சொல்லும் ஆண்களை அடக்கி பெண்ணியம் வளர்கிறது என்று . பெண்ணியம் என்பது ஆணை அடக்கும் செயல் அல்ல..பெண்ணியம் என்பது பெண்ணின் உரிமை ..... நதி பெயர் மொழி பெயர் பெண்ணாக வைத்து பெண்ணை போகப் பொருளாக பார்ப்பத்தில் பெண்ணியம் எங்கே வாழ்கிறது .....???
பெண்கள் புதுமை பெண்களாய் மாறி விட்டோம் ..
ஆண்கள் எல்லோரும் பாரதி இல்லை.....