ஏலே பித்துக்குளி! 'ஏன்டா கொஞ்சநாளா உளரலை காணோம்? '...
ஏலே பித்துக்குளி!
'ஏன்டா கொஞ்சநாளா உளரலை காணோம்? '
"மதுரை நண்பர்கள்
பொற்றாமரைலே என்னுடைய
' குரல்களை'
போடனுமாம்!
அதனாலே
130 திருக்குரல்
எழுதிண்டிருக்கேன்! "
' அடி சக்கை?
எங்கே இரண்டு
குரலை எடுத்து விடு
கேட்கலாம்! '
"எப்பதவி வகித்தாலும் சாவில்லை :இப்பிறப்பில்,
கொடநாட்டு டிரைவர் தவிர்த்து! '
' காலத்தால் பெற்ற தங்கம், மானமின்றி,
கூவத்தூர்
முதல் கூடவே வரும்! `
'கொலை எல்லாம் கொலையல்ல:அப்பல்லோவில்,
தில்லையின் அடிச்சுவடில்லா தாண்டவம்! `
எப்படிடா பித்துக்குளி? "
'பாத்துப்போ?
அடுத்தது
உன்பேர்தான்
தில்லையின்
டயரியிலே? '