எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறை இந்து மதத்தில்...

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறை

இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதிகம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்களுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் பொருள் ஒன்பது இரவுகள் அதாவது ஒம்போது ராத்திரிகள் என்பதே இந்த‌ நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தி யாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறி யிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போ ம். கொலு மேடை9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

https://eluthu.com/images/data/ennam/medium/f3/35789/swuxv35789.jpg

1. முதலாம் படி :–

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மைகள்.                               

4. நாலாம்படி :-

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு  போன்றவற்றின் பொம்மைகள்.

5. ஐந்தாம்படி :-

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி :-

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-

மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த  சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி :-

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-

பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற் காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 11:32 am

மேலே