எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடுகதை பொய்யும் புரட்டும் கூறுவார்... உண்மையை சொல்ல நாணுவார்...

விடுகதை

பொய்யும் புரட்டும் கூறுவார்...
உண்மையை சொல்ல நாணுவார் ...
மண்ணில் விழுந்து வணங்குவார் ...
மனக்க மனக்க பேசுவார்...
வாக்குறுதி நீட்டுவார்... 
வெற்றி களிப்பில் மயங்குவார்...
பேட்டி காட்டி மயக்குவார் ..
பின் தொகுதி விட்டே செல்லுவார் ..
குதிரை பேரம் பேசுவார்...
கொல்லை லாபம் ஈட்டுவார் 
விடுதி தேடி தங்குவார் 
விடிய விடிய பொங்குவார் ... 
குடித்து கும்மாளம் போடுவார்...
குழந்தை போல விளையாடுவார்...
திரையில் முகம் நீட்டுவார் 
தெரியாமல் உளறி கொட்டுவார்..
மாட்டு தீனி திண்ணுவார் ...
ஆமைபோல் நகருவார் ..
பணமுதலை ஆகுவார்..
குடும்பம் இன்புற்று வாழுவார்...
நமக்கும் நாமம் போடுவார் 
நடுத்தெருவில் நிறுத்துவார் ..
இவனை போல் ஈனப்பிறவி 
கண்ண்டதுண்டா உலகிலே....
அவன் யார் ???  

பதிவு : க நேசன்
நாள் : 20-Nov-17, 3:48 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே