கண்ணம்மாவின் காதலன்.... ஓடிச்செல்லாத ஓடம் வரைந்தேன் ஓடும் மீனைத்...
கண்ணம்மாவின் காதலன்....
ஓடிச்செல்லாத ஓடம் வரைந்தேன்
ஓடும் மீனைத் தேடும் உன் விழியை வரைந்தேன்
விழிகள் காணும் வானம் வரைந்தேன்
அதில் காற்றை சுவாசிக்கும் உன் மூக்கை வரைந்தேன்
நாணம் கொள்ளும் முகத்தை வரைந்தேன்
அதில் நண்டை உண்ணும் உன் நாவை வரைந்தேன்
நிழலை தரும் மரங்கள் வரைந்தேன்
அதில் கிளைகள் தொடாத உன் காதிழைகள் வரைந்தேன்
வள்ளிகள் பின்னும் கொடிசெடிகள் வரைந்தேன்
அவள் கண்கள் ரசிக்கும் உன் புள்ளிகள் வரைந்தேன்
துள்ளி தாவும் உன் பாதங்கள் வரைந்தேன்
அதன்மீது பச்சை புல்லை மிச்சம் வரைந்தேன்
மானாகி மானிடனாகாமல்
மெய்யாகி பொய்யாகாமல்
காதல் செய்யும்
கண்ணம்மாவின்
காதலனை ஓவியமாய் வரைந்தேன்.....
- சஜு