கன்னி தமிழே தண்ணீருக்குள்....... பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்......
கன்னி தமிழே தண்ணீருக்குள்.......
பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்...
எத்தனை வேறுபாடுகள் எம் சமூகத்தில்
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்ல இயலவில்லை இந்நேரத்தில்.....
எம் ஆதி தமிழ் இனமே இருப்பிடமற்று அலறும் வேளையில்
இங்கு
இவர்களுக்கு மட்டும் எப்படி அருவியாய் கவிதை எழுத சிந்தனை தெளிவாகிப்போனது..
நாட்கள் கடந்து நம்பிக்கை நழுவிக்கொண்டு நாநீர் படாமல் நடுவீதியில் என் குடும்பங்கள்..
இங்கு
நாய்களை அலங்கரித்து நடுவீதியை வழிமறித்து
நாடக கூட்டங்களின்
நாட்டை விற்கும் அரங்கேற்றத்திற்கு
ஒத்திகை ஓட்டு சேகரிப்பு...
இதற் மேல் எழுத தமிழே தடுமாறி அழுகிறது