எண்ணம்
(Eluthu Ennam)
இருளை விரட்ட விளக்கை ஏற்றினேன்,கொசுவை விரட்ட கொசுவத்தி கொளுத்தினேன,,கொடுமைக்கார... (Satheeshjames)
11-May-2022 10:22 pm
இருளை விரட்ட விளக்கை ஏற்றினேன்,
கொசுவை விரட்ட கொசுவத்தி கொளுத்தினேன,,
கொடுமைக்கார பெண்ணே! உன்னை நினைக்காத நாளில்லை,
ஒரு நொடித்தனில் நீ, என்
மனதினில் குடிவரவில்லை,
வழிகளையே வாடகையாய்
தந்தாலும், மறப்பதில்லை
மனம், உன்னை நினைக்க,
உறங்கினாலும் கனவினில்....
விடிவது எப்போது....உன் நினைவில் நாளும்.....
ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்.,ஏனென்றால், அக்கோபத்திற்கு... (கவிதைபாவலன்)
15-Feb-2020 5:27 pm
ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்.,
ஏனென்றால்,
அக்கோபத்திற்கு பின்னால் எண்ணிலடங்காத
ஆசைகளும், அன்புகளும் ஒளிந்து இருக்கின்றன,
இதை புரிந்து கொண்டு பயணம் தொடங்கியவர் சிலர்,
புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்பவர்கள் பலர்..! - கவிதை_பாவலன்
நீ விலகி செல்வதால்....அனுகி வருகிறதோஎன் மனம் உன்னிடத்தில்.......... (Sivagamasundari)
30-Jun-2019 7:45 pm
உண்மையானவர்கள் என்று எண்ணி பாதி வாழ்க்கை பொய்யனவர்களோடே கழிகிறது.......இறுதியில்... (அனிதா)
21-May-2019 1:14 pm
உண்மையானவர்கள்
என்று எண்ணி
பாதி வாழ்க்கை
பொய்யனவர்களோடே
கழிகிறது.......
இறுதியில்
வாழ்க்கையின்
மிச்சத்தில்
எச்சங்களாக
ஏமாற்றங்கள் மட்டுமே .......
குருட்டுத்தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப்போல மோதி விழுகிறேன்... (சே குமார்)
24-Jan-2019 11:42 am
குருட்டுத்தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப்போல மோதி விழுகிறேன் உன் நினைவுகளை சுமந்தபடி....
எத்தனை முறை எழுந்து பறந்தாலும் எனை மோதி வீழ்த்துவதும் நீயென அறியாமல் ....
🙁🙁😕😕🤕🤕
பிரிந்து சென்றதேன்
உன்னுடைய பாதையை நீ தேர்ந்தெடுத்தாய் அது உன் தவறில்லை..என்னுடைய பாதையை உனக்காக தவறவிட்டேன் அதுவும் தவறில்லை..
உன்னுடைய பாதையில் செல்வதற்காக என்னை பாதியில் விட்டுச் சென்றது ஏன்?
நான் என்ன தவறு செய்தேன்? உன்னை நேசித்ததை தவிற....
கன்னி தமிழே தண்ணீருக்குள்....... பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்...... (தமிழரண்)
08-Dec-2017 11:20 pm
கன்னி தமிழே தண்ணீருக்குள்.......
பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்...
எத்தனை வேறுபாடுகள் எம் சமூகத்தில்
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்ல இயலவில்லை இந்நேரத்தில்.....
எம் ஆதி தமிழ் இனமே இருப்பிடமற்று அலறும் வேளையில்
இங்கு
இவர்களுக்கு மட்டும் எப்படி அருவியாய் கவிதை எழுத சிந்தனை தெளிவாகிப்போனது..
நாட்கள் கடந்து நம்பிக்கை நழுவிக்கொண்டு நாநீர் படாமல் நடுவீதியில் என் குடும்பங்கள்..
இங்கு
நாய்களை அலங்கரித்து நடுவீதியை வழிமறித்து
நாடக கூட்டங்களின்
நாட்டை விற்கும் அரங்கேற்றத்திற்கு
ஒத்திகை ஓட்டு சேகரிப்பு...
இதற் மேல் எழுத தமிழே தடுமாறி அழுகிறது
அருமை கோபமும் அழகு. கோபம் கொள் இல்லையேல் இந்த கயவர்கள் நம்மை இரையாக்கிவிடுவார்கள்.. 04-May-2018 3:32 pm
கிராமத்துக் காதல்காலங்கூட தெரியாம காலாற நடந்தபயல,மூக்குத்தி அழகால உன்பின்னால... (வெங்கடேசன் கண்ணன்)
27-Nov-2017 6:31 pm
கிராமத்துக் காதல்
காலங்கூட தெரியாம காலாற நடந்தபயல,
மூக்குத்தி அழகால உன்பின்னால திரிய வச்சியே,
உதட்டோர சிரிப்பால நெஞ்சத்த இனிக்க வச்சியே,
இடுப்போரம் மடிப்பால கள்ளக்கூட
மறக்க வச்சியே,
கெண்டைக்காலு செவப்பால பித்துப்
பிடிக்க வச்சியே,
கரும்பு கூட கசந்து போகு உன் இனிப்பு பேச்சால,
சோறுகூட தேவப்படல உன் நெனப்பு வந்தால,
ஏரியோரம் காத்திருந்தேனே உன்
ஓரக்கண்ணு பார்வைக்கு,
எதிர்பாத்த கண்ணுக்கு உன்
அழகுமுகத்த காட்டுனப்போ,
நெஞ்சாங்கூட்டுல நூறுநெலாவும்
ஒன்னாசேந்து சிரிச்சுச்சே,
ஆகாசத்தெரையில மின்மினிப்
பூச்சியெல்லாம் நாடகத்தப்
போட்டுக்காட்டி நம்ம காதல்
கதையப் பேசுச்சே,
பட்டிக்காட்டுப் பயலுக்கு
பாசத்தை காட்டினியே,
களவாணிக் கருப்பனுக்கு
காதல்தான் ஊட்டுனியே,
நீயிருக்கும் தெசபாத்து,
கைகோக்க வந்தேனே,
நெழல்கூட தொடவிடாம,
கண்ணவிட்டு மறஞ்சிட்டியே,
நேத்து பெஞ்ச மழையில,
இன்னைக்கி மொளச்ச
காளான்தான் உம்பாசம்னு
சொல்லாம சொல்லிப்புட்ட,
சொல்லிப்போன வார்த்தைக்கு
அர்த்தங்கூட வெளங்காம,
வயக்காட்டு பொம்மையையும்
கல்யாணத்துக்கு கூப்பிட்டே,
பஞ்சவர்ண கிளிபோல உன்ன
நானும் அலங்கரிச்சு , அழகுக்கு
அழகு சேக்க கூரைப்பட்ட வாங்குனே,
ஊரு சனங்க வியந்து பாக்க,
கல்யாண சேதி சொல்லி,
உங்கழுத்துல நாங்கட்ட,
தாலிக்கு தங்கங்கூட,
வயல வச்சு வாங்குனே,
புள்ளவொன்னு எனக்கு குடுத்து
அப்பான்னு கூப்பிட வெப்பான்னு
நெனச்சேனே,
நெனப்பயெல்லாம் வாரி சுருட்டி
தீய கொழுத்திப்போட்டாளே,
தேடித் தேடி சேத்த தேனாட்டம்
ஊறிப்போன காதலையும்,
ஒத்தக்கல்லு ஒதவியால
அடிச்சே கலச்சிட்டியே,
கலங்குன கண்ணுல தண்ணியின்னும் வத்தலயே,
வத்திப்போன தொண்டைக்கு தாகங்கூட எடுக்கலயே,
எடுபட்ட சிறுக்கி மனசுல கொஞ்சங்கூட
ஈரமில்ல,
ஈரமில்லா நெஞ்சுலயும்
பாற்கடல வார்த்த புள்ள,
சினிமாப்பாட்ட கேட்டாலும் அது
உன் நெனப்ப கூட்டுதே,
சின்னக்குளம் படித்துறையும்
நம்ம கொஞ்சல் காட்டுதே,
பஞ்சுத்திரி கணங்கூட இல்லாத நெஞ்சுக்குள்ள,
எடதெரியா பாரம் வச்சு பூமியோட
பொதச்சுப்புட்ட,
உன்னுறவ மறந்துவிட
நட்புறவ தேடுனே,
அந்த உறவும் கைய விட,
பூமி விட்டு போறே...!!!
- வெண்தேர்ச்செழியன்