எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பதினெட்டைப் பதியச் செய்வோம் 2018 கன்னிக் கவிதை :...

  பதினெட்டைப் பதியச் செய்வோம்   2018 


கன்னிக் கவிதை :      


ஈரெட்டு வயதினிலே 
          கன்னக் குழி வழிய 
          நாணி நின்றாள் என்னருமை ஏகி 
   
குருத்துக் கால் கட்டை விரல்
         பருந்து பார்வை மேயல் பெற 
         கிறங்கி நின்றான் அவளவன்   
 
கூடுதல்  கவர்ச்சின்னா பதினெட்டுதானு 
       இடுதல்  கட்டி பெருசு குறும்பாச்  சொல்ல    
       சடுதியில் உஷாரானாள் அவனவள்       

ஈரொம்பதை  விடியலில்  காண      
     கம்பு தாண்டல்  பயிற்சி கொள்ள      
     அம்புட்டு  ப்ரயத்தனித்தாள் பிராட்டியவள்   
     
மூவாரைத்  தரிசித்தாள் பதினேழின்  பின்னாளில் 
        ஈராறு அடிதன்னை    
       (ஒரே) முச்சூட்டில் தாண்டியபின் ..


      குறிப்பு:   ஈராறு: 12,  மூவாறு:  18    ஈரொம்பது:  18      
                                         


பதிவு : KADAYANALLURAN
நாள் : 31-Dec-17, 9:27 pm

மேலே