எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முயற்சி துணை💪 தோல்விகள் கண்டு மயக்கம் ஏன் தோழா...

              முயற்சி துணை💪


தோல்விகள் கண்டு மயக்கம் ஏன் தோழா ? 
தடைகளை தகர்க்க தயக்கம் ஏன் தோழா ? 
உன்மீது நம்பிக்கை கொள் தோழா , 
உனக்கென்று பாதையை உருவாக்கு தோழா, 

முடர்கள் நிறைந்த இடத்தில் 
முரண்பாடுகள் கொள்ளதே, 
முடிந்தவரை விலகி சென்று விடு, 
முன்னேற்றம் ஒன்றே முதன்மையாக்கிடு, 

துயரால் காயம் கொண்டால் 
அழ்ந்த துயிலை நாடதே, 
துடிப்புடன் மீண்டும் எழுந்திடு, 
மதிகொன்டு விதியை வென்றிடு, 

கனவுகள் யாவரும் காணலாம் 
கரைகளை அடைந்தவர் சிலரே, 
உழைப்பால் உயர்ந்திடு, 

உலகத்தை வென்றிடு.......


#MUYARCHITHUNAI💪

பதிவு : NATHAN K
நாள் : 26-Mar-18, 10:13 pm

மேலே