எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆத்தாஉன்மேல... அந்த ஆகாயத்த போல... பாசம் வைச்சனே.. அது...

  ஆத்தாஉன்மேல...
அந்த ஆகாயத்த போல...
பாசம் வைச்சனே..
அது வேசம் இல்லத்தா...
பாசம்தானாத்தா....

பள்ளிக்கூடம் போகயிலே
பத்து காசு தந்தியே..
அது காசு இல்லாத்தா...
என் மேல் வைச்ச 
பாசம் தானத்தா...

ஹஸ்டல்ல படிக்கையில..
அரிசிமாவு தந்தியே..
அது மாவு இல்லாத்தா
நீ வச்ச பாசம் தானத்தா...

நித்தம் நித்தம் 
தூக்கையில நெஞ்சு
உன்னை தேடுதம்மா
அது வேசம் இல்லாத்தா...

என் உடம்பு நோகுமுன்னா
உன் உசுரு நோகுமம்மா
அது வேசம் இல்லாத்தா
பாசம் தானத்தா...

நான் ஓடி போகுரேனு
ஓசி டிவி பாக்கிறேனு
உன் நெஞ்சு ஓயலயே
சொந்த டிவி வாங்குவரை...
அது வேசம் இல்லாத்தா
பாசம் தானத்தா...

மிச்ச சோறு
சாப்பிட்டயே
மீறி பிள்ளை வளந்ததுனூ...

நித்தம் ஆண்டவனை தேடினியே
நாங்க நல்ல வாழனுன்னூ
அந்த ஆண்டவனும் நீதானே
என்னை ஆண்டவளும் நீ தானே...

பட்டமும் வாங்கலயே
பதவிக்கும் போகலயே
பாசம் என்னும் பல்கலைகழகம் 
அதில் முடிசூடா வேந்தனம்மா ...


என் நெஞ்சன்னும் கோவிலிலே
நீதான் என் சாமியம்மா...

என்றும் அன்புடன்
டேவிட் சாமுவேல் ராஜா...  

நாள் : 15-May-18, 4:16 pm

மேலே