கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘கனா காணும் வினாக்கள்’ எனும்...
கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘கனா காணும் வினாக்கள்’ எனும் கேள்விகளாலான கவிதை நூலை 2004-ல் வெளியிட்டார். பாப்லோ நெரூதாவின் நூற்றாண்டினையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், தற்போது ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரேகொரி ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அகராதித் துறையில் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் கிரேகொரி ஜேம்ஸ், ஆங்கிலத்தில் தமிழ் ஒலிக்குறிப்பையும் சேர்த்து இணைத்திருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். கவிதைகளாலான கேள்விகள் திசையெட்டும் எழட்டும்!