எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் இனிமையாய் பிறக்க போவதில்லை இந்த பூவுலகம்; இன்னும்...

இன்னும் இனிமையாய் பிறக்க போவதில்லை இந்த பூவுலகம்;

இன்னும் இனிமையாய் விரியப் போவதில்லை இந்த பரந்த வானம்;

இன்னும் இனிமையாய் ஒலிக்கப் போவதில்லை இந்த பறவைகளின் ராகம்;

இன்னும் இனிமையாய் சுவைக்கப் போவதில்லை இந்த பழங்கள்;

இன்னும் இனிமையாய் நிழல் தரப் போவதில்லை இந்த மரங்கள்;

இன்னும் இனிமையாய் கிரீச்சிடப் போவதில்லை இந்த பூச்சிகள் அனைத்தும்;

இன்னும் இனிமையாய் ருசிக்கப் போவதில்லை நாம் அருந்தும் தண்ணீர்;

இன்னும் இனிமையாய் களிக்கப் போவதில்லை இந்த காட்டு விலங்குகள்;

இன்னும் இனிமையாய் இருந்துவிடப் போவதில்லை நம் சந்ததிகள்;

ஆம் மென்று முழுங்கிவிட்டோம் அனைத்தையும்...

வெறும் கையை மட்டும் தானே சூப்பிக்கொண்டிருக்கிறோம் இப்போது..

மீட்டு எடுத்தால் மீள்வோம் நாம்...

விட்டுக்கொடுத்தால் வீழ்ந்துதானே போவோம் நாம்...

நமக்கு நாமே மீட்டெடுப்போம் இந்த இனிய பூவுலகை

ஆம்... ஸ்மார்ட் போனில் மறைந்து மறந்த போனவற்றை எல்லாம்..

உழவில் கால் வைத்து மீட்டெடுப்போம்...
                       

நாள் : 21-Jul-18, 10:36 am

மேலே