எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் வரும் போது என்னையே நீ அழைத்தாய் பசி...

காதல் வரும் போது 
என்னையே நீ அழைத்தாய் 
பசி வரும் போதும் என் 
கரங்களையே நீ பார்த்தாய் 
உறக்கம் வரும் போது 
என்னையே நீ அணைத்தாய் 
துயரத்தில் மூழ்கும் போதும் 
என்னிடமே நீ உரைத்தாய் .

வெட்கத்தையும் அச்சத்தையும் 
நீ என்டமே மறந்தாய் 
துக்கத்தையும் துயரத்தையும் 
என்னிடமே நீ பகிர்ந்தாய் 
உடை அலங்காரத்தையும்  
உணவின் சுவையையும் 
என் விருப்பு வெறுப்பு 
கேட்டே நீ வாழ்ந்தாய்  

வலியையும் பல விதிக் கதையையும் 
நீ என்னிடமே கூறி இருப்பாய் 
மகிழ்ச்சியிலும் புகழ்ச்சியிலும் குதுகழிக்கும் 
போதும் நீ என்னுடனே சேர்ந்தாய்  

வேற்றுமை இல்லா 
ஒற்றுமை ஒருத்தருக்குள் 
ஒருத்தராகவே வாழ்ந்தோமே என் ராசா 
மரண வாசல் திறந்ததும் என்னை விட்டு 
நீ மட்டும் நகர்ந்து புகுந்தாயே
 நீ செய்தவை நியாயமோ 
சொல் ராசா 
சொர்க்க வாசல் மூடியது ராசா 
என் பக்கம் நீ இல்லாத போது 
ஏக்கத்தின் அறைக்கதவு 
அகல விரிந்தது ராசா 
உன் நினைவாலே.

 பிரிவு என்ற வார்த்தையை 
உச்சரிக்காமலே பிரிந்து விட்டாயே ராசா 
உச்சு சூரியன் போல் சுட்டெரிக்கின்றதே
 நினைத்து நினைத்து நான் இருக்கையிலே ராசா.

இதயமோ உடைந்தது
என் வாழ்வோ இருண்டே போனது 
விடியா இரவுகளாகவே நீள்கின்றதே ராசா ..

   

பதிவு : ஆர் எஸ் கலா
நாள் : 28-Aug-18, 2:51 pm

மேலே