எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

30 .மயக்கேமேனோ மழையே. . . ? நீள்துயில்...

30.மயக்கேமேனோ மழையே. . . ?

நீள்துயில் கொண்டாயோ - அல்ல
நினைவுகள்தான் மறந்தாயோ 
நிலமணைத்த வான்மகளே 
என்னை அணைக்க மறுப்பதேனோ?
தொட்டால் கெட்டுப்போவாயோ -அல்ல 
தொடும் தகுதிதான் எனக்கில்லையோ ?
காத்திருப்பது என் வாடிக்கை - அதில் 
உனக்கோ வேடிக்கை - தூரமா நீயிருந்து 
நெஞ்சில் பாரந்தனை  கொடுக்கின்றாய்
காலங்கடந்தாலும் வந்துவிடு 
களிப்பினை தந்துவிடு 
ஓ .. நானறிவேன் 
இதயமற்ற மனிதர்கள் மத்தியில்
இரக்கமற்று போனாயோ நீயும்!
  
வறண்டது மண்மட்டும் அல்ல 
மக்கள் இதயமும்தான் - உன் வருகை 
எங்களுக்குள் பேருவகை
வா மழை மகளே - எங்கள் 
வாழ்க்கை வளம் பெறவே 
   
வேண்டுகோளுடன் 
    மு. ஏழுமலை.
 பதிவு : மு ஏழுமலை
நாள் : 13-Mar-19, 1:49 pm

அதிகமான கருத்துக்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே