31 . மழையே மலர்க ஏர் பூட்டி காத்திருக்கான்...
31. மழையே மலர்க
ஏர் பூட்டி காத்திருக்கான் விவசாயி
எங்கத்தான் போனாயோ மகமாயி
காத்திருக்கோம் நாங்களெல்லாம்
உன்னை பாக்க - கதிரடிச்சி
சோறு வடிச்சி மக்க வயிறு ருசிக்க
வான்விட்டு வருவாயோ - மக்க
உசுரு வாழ்விக்க - வாய் பிளந்து
காத்திருக்கு மண்ணெல்லாம்
வந்திறங்கி தருவாயோ பொன்னெல்லாம்
உலகுக்கு உணவளிக்க உழவனிருக்கான்
உழவனுக்கு தோள்கொடுக்க யாரிருக்கா?
உழுது மீந்தது ஏதுமில்லை - உறவா
நீயில்லன்னா இங்கே உசுரு இல்ல .
மழை வேண்டி,
மு. ஏழுமலை