எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளே!!!! உன் , முகம் காண துடித்திடமாட்டேன் முகம்...

என்னவளே!!!! 
உன் , முகம் காண துடித்திடமாட்டேன்  
முகம் பார்த்தால் சிரித்திடமாட்டேன்  
கருவிழி பார்க்க பயந்திடமாட்டேன் 
கண்ணக்குழியுள் விழுந்திடமாட்டேன்  
மூச்சின் ஆழத்தில் மூழ்கிடமாட்டேன்  
இதழின் சுவையில் மயங்கிட மாட்டேன்  
முத்தம் நூறு கொடுத்திடமாட்டேன்  
கூந்தலின் அடர்த்தியில் சிக்கிட மாட்டேன்  
கைகள் கோர்த்து நடந்திட மாட்டேன்  
விரல் நகங்களை சேர்த்திடமாட்டேன்  
பாதம் பிடித்து தாங்கிட மாட்டேன்  
இம்மூரையேனும் இச்சபதத்தில் தோற்றிடமாட்டேன்!!

பதிவு : Suresh pandi
நாள் : 15-Dec-19, 10:02 pm

மேலே