எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆதியின் வெடிப்பே பிரபஞ்சத்தைப் படைத்த சிறப்பே இருளை போர்த்திய...

ஆதியின் வெடிப்பே  பிரபஞ்சத்தைப் படைத்த சிறப்பே 


இருளை போர்த்திய உடுப்பே  ஒளியாய் நின்ற சிறப்பே 


நரன் நாசியின் துடிப்பே  ஆவியாய் நின்ற சிறப்பே 


பலவகை பிரபஞ்ச படைப்பே  ஏகமாய் நின்ற சிறப்பே


ஆதி அந்தமற்ற இருப்பே நீ எங்கும் இருப்பது சிறப்பே 


அனைற்றையும் அழிக்கும் அழிப்பே நீ காத்து நிற்பது சிறப்பே


அறிவாய் நின்ற பொருளே நீ  அழிவில்லாதது  சிறப்பே ___


அடியாருக்கு அகப்படும் பொருளே என்னை இரட்சிக்க வந்திடு அனுதினமே


எங்கும் நிறைந்த பரமே உன்னை தலைவணங்கி  நிற்பது என் சிரமே 


உன்னிடம் கேட்பேன் வரமே அதை தருவது உந்தன் குணமே


            ------ அப்துல் கரீம்🥢








நாள் : 12-Nov-21, 7:49 pm

மேலே